எங்களுடைய வெற்றியால் அரசாங்கம் அதிர்ந்து போயுள்ளது என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ,அரசாங்கம் நிலைகுலைந்து போயுள்ளமை இன்று தௌிவாகியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சில மாவட்டங்களின் பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் பதவியேற்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன் தற்போது இருப்பது தமக்கு எதிரான அரசாங்கம் என்றும், அதனால் தமது அனைத்து செயற்பாடுகள் தொடர்பிலும் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

(Visited 57 times, 1 visits today)