அமெரிக்கா சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பு நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் உலகத்தமிழர் பேரவையின் தலைவர் வண. பிதா சீ.யோ. இம்மானுவெல் அடிகளாரும் கலந்து கொண்டிருந்தார்.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாற்றுவழிகளை முன்னெடுக்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்துவதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

(Visited 66 times, 1 visits today)