தன்னிடம் தவறாக நடந்து கொண்ட தமிழ் பட ஹீரோவின் கண்ணத்தில் ஓங்கி அறைந்தேன் என்று பிரபல நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

நடிகை ராதிகா ஆப்தே ‘வெற்றிச் செல்வன்’ என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்தப் படத்தில் அஜ்மல் ஹீரோவாக நடித்துள்ளார். அதன் பின் ‘தோனி’, ரஜினியடன் ‘கபாலி’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக இவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை நேகா துபியா நிகழ்ச்சியில் ராதிகா ஆப்தே கலந்து கொண்டார். அப்போது ராதிகா ஆப்தே பேசுகையில், ‘‘தமிழில் ஒரு படத்தில் நடித்திருந்தேன். அந்தப் படத்தின் ஹீரோ என்னிடம் தவறாக நடந்து கொண்டார். அவர் தமிழில் பெரிய நடிகர். இதற்கு முன்பு அவரை நான் பார்த்தது கூட இல்லை. என் உடம்பை அவர் தொட்டு தவறாக நடந்து கொள்ள முயன்றார். அதனால் அவரை நான் ஓங்கி அறைந்தேன் என்று கூறினார்.

(Visited 99 times, 1 visits today)