ஈழத்தில் இடம்பெற்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரி மாபெரும் போராட்டம் ஒன்று ஜெனிவாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐந்து அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி இடம்பெற்ற இந்த
மாபெரும் போராட்டம் ஜெனிவா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பமானது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டமானது ஜெனிவா முருகதாசன் திடல்வரை நடைபெற்றது.

பல தசாப்தங்களாக இலங்கையில் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை முழுமையாக ஆராய வேண்டும்.

ஐக்கிய நாடுகள் அவை மார்ச் 2011 அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம், அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடத்தி தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

(Visited 48 times, 1 visits today)