குசல் மென்டிஸின் திடீர் ஆட்டமிழப்பே இந்தியாவுடனான ஆட்டத்தில் திருப்பு முனையாக அமைந்துவிட்டதாக இலங்கை அணித் தலைவர் திசார பெரேரா கூறியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்று வரும் சுதந்திர தின கிண்ண ரி20 தொடரில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் இலங்கை இந்திய அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோல்விக்குப் பின்னர் பேசி இலங்கை அணித் தலைவர் திசார பெரேரா, குசல் மெண்டிஸ் 15 ஆவது ஓவரில் 55 ஓட்டங்களில் அவுட்டானது தான் ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. அவர் களத்தில் இருந்திருந்தால் மேலும் ஓட்டங்களை குவித்திருக்க முடியும்.

இதேபோல், நடுவில் வந்த துடுப்பாட்ட வீரர்கள் உட்பட யாரும் திட்டமிட்டபடி சிறப்பாக விளைவிடவில்லை. இதெல்லாம் சேர்ந்தே நாங்கள் தோல்வியடைய காரணமாக அமைந்துவிட்டது.

எனினும் பங்களாதேஷûடனான அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடி இறுதியாட்டத்துக்கான வாய்ப்பை தக்க வைக்க முனைவோமெனவும் தெரிவித்தார்.

(Visited 54 times, 1 visits today)