அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்டில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட தென் ஆபரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடாவுக்கு 2 டெஸ்டில் விளையாட ஐ.சி.சி., தடை விதித்துள்ளது.

போர்ட் எலிசபெத் நகரில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் தென் ஆபிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் முதல் நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய கப்டன் ஸ்டீவ் ஸ்மித் தோள் மீது உரசியதால் சர்ச்சையில் சிக்கிய தென் ஆபிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஐ.சி.சி., போட்டி நடுவர் ஜெப் குரோவ் விசாரணை நடத்தினார். இதில், ரபாடா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 3 அபராத புள்ளிகள் வழங்கப்பட்டது. இதுவரை மொத்தம் 8 அபராத புள்ளி பெற்றதால், ஐ.சி.சி., விதிமுறைப்படி ரபாடாவுக்கு 2 டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து இவர், கேப்டவுண் (மார்ச் 2226), ஜொகனஸ்பேர்க் (மார்ச் 30 ஏப். 3) டெஸ்டில் பங்கேற்க மாட்டார். தவிர, இப்போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய துணைக் கப்டன் டேவிட் வார்னரை போல்டாக்கிய போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக ரபாடா மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இவர் மீதான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், போட்டி சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் மற்றும் ஒன்று அல்லது இரண்டு அபராத புள்ளி வழங்கப்படும் அபாயம் உள்ளது.

(Visited 25 times, 1 visits today)