போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 2வது டெஸ்டில் அவுஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆபிரிக்கா வெற்றி பெற்றது.

தென்ஆபிரிக்கா அவுஸ்திரேலியா இடையிலான 2 ஆவது டெஸ்ட்டில் அவுஸ்திரேலியா முதல் இனிங்சில் 243 ஓட்டங்களும் தென்ஆபிரிக்கா 382 ஓட்டங்களும் எடுத்தன.

139 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய அவுஸ்திரேலியா 2 ஆவது இனிங்ஸில் 239 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் கவாஜா 75 ,மிட்செல் மார்ஷ் 45 ஓட்டங்கள் எடுத்தனர்.

முதல் இனிங்சில் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய ரபாடா 2 ஆவது இனிங்சில 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

முதல் இனிங்சில் அவுஸ்திரேலியா 139 ஓட்டங்கள் பின்தங்கியிருந்ததால், ஒட்டுமொத்தமாக தென்ஆபிரிக்கா100 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. இதனால் தென்ஆபிரிக்காவின் வெற்றிக்கு 101 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆடிய தென்ஆபிரிக்கா 22.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 102 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 11 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய ரபாடா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்ஆபிரிக்கா 11 என சமநிலைப்படுத்தியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவது டெஸ்ட் கேப்டவுனில் 22 ஆம் திகதி தொடங்குகிறது.

(Visited 14 times, 1 visits today)