இந்திய அணிக்கு எதிராக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்தின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் விளையாடும் வாய்ப்பை இழக்கவுள்ளார்.

பிரிஸ்டலில் கடந்த வருடம் நவம்பர் மாதம் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்பு கொண்டுள்ள அவர், ஏற்கனவே ஆஷஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்ற அனுமதிக்கப்படவில்லை.

மீண்டும் அவர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை பிரிஸ்டல் நீதிமன்றில் நேரடி காணொளி ஊடாக விசாரணைக்கு பிரசன்னமாகியிருந்தார்.

இதன்போது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி இந்தச் சம்பவம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அந்தக் காலப்பகுதியில் நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலையேற்பட்டுள்ளது.

இந்த விசாரணையானது 5 அல்லது 7 நாட்களுக்கு நடைபெறும் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

(Visited 9 times, 1 visits today)