இலங்கையில் நடைபெறும் முக்கோண ரி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பு கிட்டுமா என்ற எதிர்பார்ப்பில் இன்றைய போட்டியை இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இலங்கை , இந்தியா , பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் முக்கோண ரி20 தொட் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோதும் நிலையில், இந்திய அணி இன்று தனது இறுதிப் போட்டியில் பங்களாதேஷûடன் மோதவுள்ளது.

இதுவரை இந்திய அணி பங்கேற்ற 3 போட்டிகளில் இலங்கையுடன் ஒரு போட்டியிலும், பங்களாதேஷûடன் ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றதுடன், இலங்கையுடன் ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது.

இந்த நிலையில், பங்களாதேஷûடன் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் இறுதிப் போட்டிக்கு இலகுவாக நுழையும் வாய்ப்பு கிடைக்கும்.

இலங்கை அணியுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற 2 ஆவது சுற்றுப் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய அணி வெற்றிபெற்றது. ஏற்கனவே முதல் சுற்றுப் போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியுள்ளதால், இன்றைய போட்டியிலும் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிடலாமென்ற எதிர்பார்ப்பில் இந்திய அணி இருக்கின்றது.

எனினும், பங்களாதேஷ் அணி இலங்கை அணியுடனான கடந்த போட்டியில் மிக அற்புதமாக ஆடி வெற்றியைப் பெற்றது. 200 க்கு மேல் ஓட்டங்களைக் குவித்து தனது ரி20 வரலாற்றில் ஆகக் கூடிய ஓட்ட இலக்கை துரத்திப்பிடித்து வென்ற சாதனையையும் பங்களாதேஷ் அணி படைத்திருந்தது. இந்த நிலையில், இன்றைய போட்டியிலும் அவர்கள் மிக ஆக்ரோஷமாக விளையாடி இந்திய அணியை வீழ்த்தி தங்களது இறுதியாட்ட வாய்ப்பை பலப்படுத்த முயல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய போட்டியில் மோதும் இரு அணிகளும் சம பலத்துடன் களமிறங்குவதால், இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 27 times, 1 visits today)