இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொல்வதற்கு குண்டு தயாரித்தவர் இலங்கையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விசாரணை முகவரமைப்பான சி.பி.ஐ. இந்திய உயர் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இதனைத் தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை மீள ஆரம்பிக்க முடியாது எனவும் கொலையாளிகளில் ஒருவரின் வேண்டுகோளை நிராகரிக்க வேண்டும் எனவும் சி.பி.ஐ. நீதிமன்றத்திற்கு தெரிவித்ததாக என்.டி.ரி.வி. செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது.
ஏ.ஜி. பேரறிவாளன் தனக்களிக்கப்பட்ட தீர்ப்பை இரத்துச் செய்யுமாறு நீதிமன்றத்திடம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அத்துடன் 26 வருடமாக சிறையிலிருந்துவரும் அவர், தனது வழக்கை மீள ஆரம்பிக்குமாறும் கேட்டிருந்தார். இந்நிலையில் இலங்கையிலிருந்து எந்த உதவியும் இல்லை என தெரிவித்திருக்கும் சி.பி.ஐ. குண்டு வெடிப்புத் திட்டத்தை தீட்டியவரை விசாரணை செய்வதற்கு இலங்கையிலிருந்து உதவி கிடைக்கவில்லை என்று கூறியுள்ளது.

குண்டு தயாரித்தவர் இலங்கையில் இருப்பதாகவும் விசாரணையாளர்கள் அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கவில்லை எனவும் பேரறிவாளன் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

(Visited 62 times, 1 visits today)