பேஸ்புக் பயன்படுத்தும் உரிமையை உறுதி செய்வதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுடன் வீதிக்கிறங்கி போராடத் தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியுள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட முறுகல் நிலை தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினத்துடன் (புதன்கிழமை) அவசர காலச் சட்டமும் நீக்கப்படவுள்ளது. ஆனால் பேஸ்புக் மீதான தடை இன்னும்
நீக்கப்படவில்லை.

இனவாத முறுகலை தடுப்பதற்காக என்று கூறிக் கொண்டு அரசாங்கத்துக்கு எதிரான சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த முற்படுகிறது.

இந்த தடை எவ்விதத்திலும் நடைமுறைச் சாத்தியமில்லை. தற்போது இளைஞர், யுவதிகள் திருட்டுத்தனமாக பேஸ்புக் பயன்படுத்த நேர்ந்துள்ளது. வெறுப்பு பிரசாரங்களை பரப்புவதற்கு பேஸ்புக் பயன்படுத்தப்படுவதாக கூறி அதனை தடை செய்துள்ளமை வேடிக்கை என்றும் உதய கம்மன்பில கூறினார்.

(Visited 26 times, 1 visits today)