கண்டியில் இடம்பெற்ற குழப்பங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக பேஸ்புக், வைபர் மற்றும் வட்சப் ஆகிய சமூக ஊடகங்களை தற்காலிகமாக இலங்கை அரசாங்கம் தடை செய்திருந்தமை சரியானதா இல்லையா என்று மக்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் 71.4  வீதமானோர் அந்த முடிவு சரியானதென பதிலளித்துள்ளனர்.

இதேவேளை இவ்வாறு சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டால் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கும்  49 வீதமானோர் “ஆம்’ என்று பதிலளித்துள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற குழப்பங்களைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் தவறான செய்திகளும் வெறுப்பூட்டும் செய்திகளும் பரவுவதனை தடுக்கும் நோக்குடன் அரசாங்கம் சமூக ஊடகங்களான பேஸ்புக் , வட்சப்இவைபர் ஆகியவற்றை தடை செய்திருந்தது.

இந்நிலையில்இ கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஆங்கிலப் பத்திரிகையொன்றினால் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அரசாங்கம் மேற்கொண்ட முடிவு சரியானதென பெரும்பாலானோர் வாக்களித்துள்ளனர்.

இதேவேளை இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டிருந்த 28.6 வீதமானோர் அரசின் முடிவு தவறானதென்று கூறியிருந்த அதேநேரம் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு 49 வீதமானோர் “ஆம்’ என்றும்  38.8 வீதமானோர் இல்லையென்றும் 12.2 வீதமானோர் தீர்மானிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

வர்த்தக நிபுணர்கள், புலமையாளர்கள், மாணவர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளடங்கிய 200 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தது. அத்துடன், இந்த ஆய்வில் கலந்துகொண்டிருந்த இளைஞர்களும் அரசின் முடிவு சரியானதென்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் சிரேஷ்ட அல்லது அதிக வயதுடைய அதிகாரிகள் அரசின் முடிவை தவறானதென குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்த சிலர் சமூக ஊடகங்களை தடை செய்வதைக் காட்டிலும் அவற்றில் வெறுப்பூட்டும் கருத்துக்களை பகிர்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கவேண்டுமென்று கூறியுள்ளனர்.

“இது சரியானது. ஆனால் அந்த கட்டுப்பாட்டுகள் இருக்கும் வரையில் அமுலில் இருக்கும். இருந்தபோதிலும் தவறான நோக்கங்களுடன் கருத்துக்களை பகிர்வு செய்வோர் தொடர்பில் அது தொடர்ந்து பயன்படுத்தப்படும்’  என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

வெறுப்பூட்டும் பேச்சுக்கள் சகிக்க முடியாதவை அதேநேரம் சமூக ஊடகங்கள் மக்களை தவறாக வழிநடத்தக் கூடாதென்பதனையும் உறுதிப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் முன்வைக்கப்படவேண்டும். அத்துடன் மற்றவர்களின் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் அவை பயன்படுத்தப்பட வேண்டுமென்று இன்னொருவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 95 times, 1 visits today)