அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் நம்பிக்கையை குறையச் செய்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

கண்டியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளை மதகலவரம் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கண்டி சம்பவம் கிளர்ச்சி மற்றும் போர் அனுபவங்களை கொண்ட ஒரு சமூகத்தில் ஒரு மிருகத்தனமான செயற்பாடு என்று அவர் விமர்சித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் நாளை ஏனையவர்கள் சட்டத்தை தமது கைகளில் எடுக்கத் தயங்கமாட்டார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

புதிய அரசாங்கம்இ ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால் இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் நம்பிக்கையை குறையச் செய்துள்ளதாகவும்ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் இலங்கையால் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியாது என்றும் நவநீதம்பிள்ளை அந்த செவ்வியில் தெரிவித்திருக்கிறார்

(Visited 66 times, 1 visits today)