13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் வடக்கு தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளை நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன் தெரிவித்தார்.

இதன் ஓர் அங்கமாக, சுமார் 5 வருடங்களில் எமது அரசாங்கத்தினால் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள காணிகளில் இதுவரை 3,953 ஏக்கர் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன் தெரிவித்தார்.

அது பாரிய அளவிலான முன்னேற்றம் எனவும், அவ்வாறான காணி விடுவிப்பு தொடர்பிலும் மிக கூடிய அளவு பங்களிப்புகள் அரசாங்கத்திடமும் காணப்படுகின்றது என ஆளுநர் தெரிவித்தார்.

(Visited 1 times, 1 visits today)