சிறைச்சாலைகளில் இருந்தே போதைப்பொருள் கடத்தல்கள் வழிநடத்தப்படுகின்றன என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கெக்கிராவையில்  நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுகின்றது.

உண்மையில் சாட்சியங்களுடன் இவை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தால், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதில் எவ்வித தவறும் இல்லை என்பதே எனது நிலைப்பாடு.

மரண தண்டனைக்கு எதிராக பேசுவோரிடம் நான் ஒரு விடயத்தை கேட்கின்றேன். போதைப்பொருள் கடத்தல் காரணமாக நாட்டில் பாதிக்கப்படும் 45 இலட்சம் பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக என்ன செய்ய போகின்றீர்கள்? ஆகவே, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பாக நாம் தீர்மானம் எடுக்க வேண்டும்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பாக சிந்திக்க வேண்டாம். தயவு செய்து 45 இலட்சம் பாடசாலை மாணவர்கள் குறித்து சிந்தியுங்கள்.

(Visited 1 times, 1 visits today)