கடும் வறட்சி காரணமாக வட மாகாணத்தில் 1 இலட்சத்து 93 ஆயிரத்து 573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என இடர் முகாவைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி  தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் கடும் வறட்சி காரணமாக 17 மாவட்டங்களைச் சேர்ந்த 565,173 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் 156,994 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாவைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீரை விநியோகிப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)