வலிகாமம் வடக்கு தையிட்டி தெற்கு ஜே-250 , தையிட்டி வடக்கு ஜே-249. உள்ளடக்கிய மக்களின் 27.5 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் விடுவிக்கப்பட்டுள்ளது.

காணி விடுவிப்புக்கான நிகழ்வு தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெற்றது. இதில் யாழ்ப்பாண இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியினால் காணி விடுவிப்பு பத்திரம் ஆளுநரிடம் வழங்கப்பட்டது. பின்னர் ஆளுநர் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரனிடம் வழங்கப்பட்டது.

இதேவேளை பலாலி வடக்கு அமெரிக்கன் மிஷன் பாடசாலையினை கட்டுவதற்கு ஒரு ஏக்கர் நிலப்பகுதியும் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுளது.

இதேவேளை தையிட்டியில் விடுவிக்கப்பட்ட காணியில் கிட்டத்தட்ட 45 குடும்பங்களுடைய காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள வீடுகள் இராணுவத்தினர் பயன்படுத்தியமையால் ஓரளவு நல்ல நிலையில் உள்ளதுடன் வீட்டுக்கு மார்பிள், பெயின்ட் பூசி பராமரித்துள்ளனர்.

.

(Visited 1 times, 1 visits today)