அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கூறினார்.

இன்று கொழும்பில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இதனைக் கூறினார்.

பதவிகளை இராஜினாமா செய்யத் தீர்மானித்தது மக்களின் பாதுகாப்புக்காகவே என்றும், தற்போது ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று பெரும்பாலும் உறுதியாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது சம்பந்தமாக ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

ரிஷாத் பதியுதீனும் மீண்டும் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுக் கொள்வார் என்றும் பைசல் காசிம் கூறினார்.

(Visited 1 times, 1 visits today)