கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முழு அதிகாரம் கொண்ட கணக்காளர் நியமிக்கப்பட்டதற்கு கல்முனை மக்கள் பட்டாசு கொளுத்தி தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை  பிரதமர் ரணில் விக்ரமசிங்க முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாக கூட்டமைப்பிடம் தெரிவித்தார்.

இதன் முதல்கட்டமாக சகல அதிகாரமும் கொண்ட நிதிப்பிரிவு உருவாக்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதுடன் சகல அதிகாரம்கொண்ட கணக்காளரை நியமிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதனை வரவேற்று நேற்று மாலை கல்முனை மாநகரில் இளைஞர்கள் பட்டாசு கொளுத்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டுவந்த கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜனும் பங்குகொண்டதுடன் அவரை இளைஞர்கள் தூக்கி தமது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

 

(Visited 1 times, 1 visits today)