எவன்கார்ட் சம்பவம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

எவன்கார்ட் மெரியட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தான் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 20ம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தவு பிறப்பித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)