ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் உயர் பொலிஸ் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் நிலந்த ஜெயவர்த்தன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பணியாற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கு நாளை அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் விசாரணை பணிப்பாளர் வருண ஜெயசுந்தர மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் தரங்க பதிரண ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

 

(Visited 1 times, 1 visits today)