இலங்கையில் நடைபெற்று வரும் சுதந்திரக் கிண்ண இருபதுக்கு-20 தொடரின் அடுத்த இரண்டு போட்டிகளின் இலங்கை அணியின் தலைவராக திசர பெரேரா செயற்படவுள்ளார்.

குறித்த விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பங்களாதேஷ் அணிக்கெதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற இருபதுக்கு-20 போட்டியில் பந்து வீச்சுக்கு அதிக நேரம் எடுத்துக்கொண்ட காரணத்திற்காக தினேஸ் சந்திமாலுக்கு 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இலங்கை அணியின் தலைவராக திசர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி இன்று நடைபெறவுள்ள இந்திய அணிக்கெதிரான போட்டி மற்றும் பங்களாதேஷ் அணிக்கெதிராக நடைபெறவுள்ள போட்டிகளுக்கு திசர பெரேரா தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 37 times, 1 visits today)