கோலிவுட்டில் ஒவ்வொரு வாரமும் வார விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு வெள்ளியன்று குறைந்தது ஒரு படமாவது திரைக்கு வரும். அந்தப் படம் சிறிய பட்ஜெட் படமாகவோ அல்லது பெரிய பட்ஜெட் படமாகவோ இருக்கும். இல்லையென்றால், சாதாரண அறிமுக ஹீரோவின் படமாகவோ அல்லது மாஸ் ஹீரோவின் படமாகவோ இருக்கும். அந்த வகையில் நாளைக்கு யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள கூர்கா படம் உள்பட கொரில்லா, போதை ஏறி புத்தி மாறி, வெண்ணிலா கபடி குழு 2, தோழர் வெங்கடேசன், கண்ணாடி ஆகிய 6 படங்கள் வெளியாக உள்ளன.

இதில், 3 படங்களில் யோகி பாபு நடித்துள்ளார். கூர்கா என்ற படத்தில் யோகி பாபு முன்னணி ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூர்கா:

சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு, மனோபாலா, சார்லி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூர்கா. நாளை வெளியாகவுள்ள இப்படத்திற்கு ராஜ் ஆர்யன் இசையமைத்துள்ளார். தமிழக அரசியலையும், சினிமா பிரபலங்களையும் கலாய்க்கும் வகையில் இருப்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கொரில்லா:

டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா,ஷாலினி பாண்டே, யோகி பாபு, ராதா ரவி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கொரில்லா. சிம்பான்ஸி கதையை மையப்படுத்திய இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஜிக் ஜிக்கு ஜில்லாக்கி என்ற பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் பாடலை அந்தோணி தாசன் மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் நாளைக்கு திரைக்கு வருகிறது.

வெண்ணிலா கபடி குழு 2:

இயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில் விக்ராந்த், அர்த்தனா பீனு, சூரி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வெண்ணிலா கபடி குழு 2. கபடி விளையாட்டை மையப்படுத்திய இப்படம் நாளை திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

போதை ஏறி புத்தி மாறி:

இயக்குனர் சந்துரு இயக்கத்தில் தீரஜ், ராதாரவி, சாரலி, அஜய், ப்ரதைனி, துஷாரா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் போதை ஏறி புத்தி மாறி. கேபி இசையமைத்துள்ள இப்படம் நாளைக்கு திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

கண்ணாடி:

இயக்குநர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் மாநகரம் பட புகழ் சந்தீப் கிஷன் நடித்திருக்கும் படம் கண்ணாடி. ஹாரர் திரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில் புதுமுக அனன்யா ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் நாளைக்கு திரைக்கு வரவுள்ளது.

தோழர் வெங்கடேசன்:

சுசீந்தரன் தமிழ் சினிமா இயக்குநர்களில் குறிப்படத்தக்க படங்களை தந்தவர். இவர் தன்னுடன் நான் மகான் அல்ல, ராஜபாட்டை ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய மகாசிவன் என்பவரின் முதல் படத்தை பார்த்து பிரமித்துள்ளார். ”தோழர் வெங்கடேசன்”எனும் பெயரில் உருவாகியுள்ள இப்படத்தை பார்த்தவர், தானே இப்படத்தை ரிலீஸ் செய்கிறார்.

மைனாவிற்கு பிறகு ஒரு புதுமுக ஹீரோ நடித்து, மிகப்பெரும் வெற்றிப்படமாக மாறப் போவது இந்தப்படம் தான் என்று கூறியுள்ளார். காலா பிலிம்ஸ் பி.லிட் சார்பாக, மாதவி அரிசங்கர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் மகாசிவன் இயக்கத்தில் அறிமுக நாயகன் அரிசங்கர், அறிமுக நாயகி மோனிகா சின்னகொட்லா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

எளிய, நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில், ஒரு விபத்து, அதோடு தொடர்புடைய சட்ட சிக்கல்கள், எந்த விதமான தாக்கங்களையும், வலிகளையும், வேதனைகளையும், பின்னடைவுகளையும் அவர்கள் வாழ்வில் ஏற்படுத்துகிறது என்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது ”தோழர் வெங்கடேசன்”.

(Visited 1 times, 1 visits today)