வைத்தியர் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துவதற்கு போதுமான சாட்சிகள் இல்லை என்று தெரிவித்து பாதுகாப்பு அமைச்சுக்கு நேற்று அறிக்கை சமர்பிக்கப்பட்டதையடுத்து அவரை தடுத்து வைப்பதற்கான அனுமதி இரத்து செய்யப்பட்டதாக பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் துசித் முதலிகே நீதிமன்றில் தெரிவித்தார்.

குருணாகலை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று காலை 10.30 மணியளவில் குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

பயங்கரவாத அமைப்புக்களின் முன்னேற்றத்துக்கு நிதி உதவி செய்துள்ளதாக வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கு போதுமான சாட்சிகள் இல்லை என்று பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் தெரிவித்தார்.

அத்துடன் அவருக்கு எதிரான அசாதாரண சொத்து சேகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை தொடர்வதாக அவர் மேலும் கூறினார்.

அதேநேரம் அவருக்கு எதிரான நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அசாதாரண நிதி உழைப்பு சம்பந்தமான குற்றச்சாட்டை நியாயப்படுத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும், எனினும் அது தொடர்பில் தொடர்ந்து விசாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

(Visited 1 times, 1 visits today)