தனுஷ் நடிக்க கௌதம் மேனன் இயக்கத்தில் 2016ல் ஆரம்பிக்கப்பட்ட படம் எனை நோக்கி பாயும் தோட்டா. தமிழில் மிக முக்கியமான இயக்குநராக பார்க்கப்பட்ட கௌதம் மேனனும் நடிப்பு ராட்சசனாக அறியப்படும் தனுஷும் இணையும் படமென்பதால் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தனுஷ் எப்போதும் கொஞ்சம் லோக்கலான அழுக்கு பையனாக, ரௌடியாக, எதிர் வீட்டுப்பையன் போன்ற கேரகடர்களில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆனால் கௌதம் மேனன் படங்கள் அனைத்திலும் ஹீரோ ஸ்டைலிஷாக இருப்பார்கள். அவர் ஹீரோக்களை காட்டும் விதம் தனித்து தெரியும்படி இருக்கும். இந்த நிலையில் இந்தக்கூட்டனியின் படம் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

2016 ல் ஆரம்பிக்கப்பட்ட படம் 2017ல் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கௌதம் மேனனின் பணப்பிரச்சனைகளால் திடீரென ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. கௌதம் மேனன் விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படம் இயக்கப் போய்விட இப்படம் முழுமையாக நின்று விட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். பின் பல மாதங்களுக்கு பிறகு எனை நோக்கி பாயும் தோட்டா திரைக்கு வரும் என பேசப்பட்டது. அப்படத்தின் டீஸர் ரிலீஸாகி ரசிகர்களிடம் ஆராவரா வரவேற்பை பெற்றது. ஆனால் மீண்டும் இப்படம் பணப்பிரச்சனைகளில் சிக்கியது. படத்தில் சில பணிகள் மிச்சம் இருந்த நிலையில் படம் டிராப் ஆனதாக தகவல் வந்தது.

கடந்த வருடம் இப்படத்தின் கடைசி கட்ட ஷூட்டிங் மீண்டும் நடைபெற தீபாவளிக்கு படம் வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் மீண்டும் பிரச்சனைகளில் சிக்கியதால் படம் ரிலீஸ் ஆவது ஒத்திவைக்கப்பட்டது. இந்தப் படத்தின் ரிலீஸ் கேலிக்கு உள்ளானது. பல மீம்ஸ்கள் படம் வெளியே வராது என கிண்டல் செய்ய ஆரம்பித்தன.

இந்த நிலையில் தான் படம் வரும் 26ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இப்படத்திற்கு யுஃஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படம் வெளியாவதற்கு முன்இ இப்படத்தின் டீசர் அல்லது டிரைலர் வரும் வாரங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷ் காலேஜ் பையனாக இருந்து ஸ்டைலிஸ் டானாக மாறும் வேடத்தில் நடித்துள்ளார். மேகா ஆகாஷ் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். சசிகுமார் இப்படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். தர்புகா ஷிவா இப்படத்தில்முதல் முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இவரின் பாடல்கள் தான் இப்படத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)