ஈஸ்டர் பண்டிகையன்று நடந்த தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. பாதுகாப்பு காரணம் காட்டி சில அணிகள் இலங்கை வராமல் இருந்தது.

இந்நிலையில் பங்களாதேஷ் , நியூசிலாந்து அணிகள் இலங்கை வரவுள்ளன.

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவிருக்கிறது. ஜூலை 26, 28 மற்றும் 31-ந்தேதிகளில் இந்த போட்டிகள் கொழும்பு பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அதன்பின் ஆகஸ்ட் மாதம் இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் காலியில் ஆகஸ்ட் 14-ந்தேதியும், 2-வது டெஸ்ட் கொழும்பில் ஆகஸ்ட் 22-ந்தேதியும் நடக்கிறது.

மூன்று டி20 போட்டிகள் ஆகஸ்ட் 31-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரை நடக்கிறது.

(Visited 1 times, 1 visits today)