இயக்குநர் பாலச்சந்தரின் 89 வது பிறந்தநாள் விழா நேற்று தனியார் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இவ்விழாவில் இயக்குநர் வஸந்த்இ இயக்குநர் பார்த்திபன், இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்தியா, நடிகர் ரகுமான்,சுஹாசினி மணிரத்னம்ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் மறைந்த இயக்குநர் இமயம் பாலச்சந்தர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கவிதாலயா சார்பில் புதிய யூடுயூப் சேனல் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இவ்விழாவில் பேசிய சுஹாஸினிரஜினி சினிமா பற்றி எதுவும் தெரியாமல் வந்து மாபெரும் உச்சததை தொட்டவர். அவர் உடபட பலருக்கு பள்ளி,கல்லூரியாக திகழ்ந்தவர் தான் இயக்குநர் இமயம் என்று பேசினார்.

அவர் பேசியதாவது….

கல்லூரியில் படித்தபோது ஒரு ஸ்கூட்டர், வங்கியில் ஒரு வேலை வாழ்க்கையில் இது இருந்தால் போதும் என்று நினைத்தவள் நான். கே. பாலச்சந்தரின் புன்னகை படம் என் வாழ்க்கையை மாற்றியது. எனக்கு இப்போது 53 வயது, ஆனால் அப்படத்தில் வரும் சத்யா கதாப்பத்திரம் போல் 10 சதவீதம் மட்டும் இருந்தால் போதும் என்று பலநாட்கள் நினைத்திருக்கிறேன்.

சிந்துபைரவி படத்தின் கதையை அனந்து என்னிடம் வந்து சொன்னபோது “கல்யாணமவருடன் காதல் செய்யும் பெண் வேடம், எப்படி வருமோ” எனப் பயந்தேன். ஆனால் காட்சிக்கு காட்சி பின்னி எடுத்திருப்பார் இயக்குநர். அந்தப்படம் என் வாழ்க்கையையே மாற்றியது.

கமல்,ரஜினி,நடித்த மூன்று முடிச்சு படத்தின் ஷீட்டிங்க் எங்கள் வீட்டில் தான் நடந்தது. ரஜினி காலகேந்திரா அனுப்பும் காரில் அபூர்வ ராகங்கள் படப்பிடிப்பில் இருந்து வருவார். தனியாகா, அமைதியாக இருப்பார். யாரிடமும் அதிகம் பேச மாட்டார். உதவி இயக்குநர் வந்து காட்சியை விவரித்து விட்டு மேலே பார் என்றால் கீழே பார்ப்பார். ஏன் கீழே பார்த்தாய் எனக் கேட்டால் கால் அரிக்கிறது என்பார். இப்படி சினிமா பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்தவர் தான் ரஜினிகாந்த். இயக்குநர்பாலச்சந்தரால்மாபெரும் உச்சம் தொட்டார்.

திரை உலகின் பலரின் வாழ்க்கையை மாற்றியவர், பலருக்கு பள்ளி கல்லூரியாக திகழ்ந்தவர், கலைஞர்கள் பலருக்கு நவரசமும் கற்றுத்தந்தவர் பாலச்சந்தர் என்று பேசினார்.

(Visited 1 times, 1 visits today)