இயக்குநர் பாலச்சந்தரின் 89 வது பிறந்தநாள் விழா நேற்று தனியார் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் வஸந்த்இ இயக்குநர் பார்த்திபன், இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்தியா, நடிகர் ரகுமான்,சுஹாசினி மணிரத்னம்ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குநர் இமயம் பாலச்சந்தருக்கு அனைவரும் அஞ்சலி செலுத்தினார்கள். திடீரென விழாவுக்குள் நுழைந்தார் இலக்கியவாதியும், எழுத்தாளரும், கவிஞருமான வைரமுத்து.

பல நேரங்களில் இவரது பேச்சு தன்னையேபுகழ்வதுபோல இருக்கும் யாரைப் புகழ்ந்தாலும் அதில் தன்னை இணைத்துக் கொள்வார். பால்ச்சந்தைரைப் புகழ்கிறேன் என்று நேற்று அவர் பேசியதுதான் பலரை காய்ப்படுத்தும்படி இருந்தது. வைரமுத்துவிற்கும் இளையராஜாவுக்குமான லடாய் உலகறிந்ததே.

வைரமுத்து பேசியபோது கடந்த காலத்தில் இளையராஜாவுடனான சண்டைக்கு பிறகு தன்னைபாலசந்தர் எப்படி மீட்டார் என்பது குறித்துத்தான். இளையராஜாவின் பெயரை குறிப்பிடாமல் ஒரு இசையமைப்பாளர் என்று பேச ஆரம்பிக்கஅது தான் குழந்தைக்கும் தெரியுமே என சுற்றி இருந்த அனைவரும் அங்கலாய்த்தார்கள். அவர் …..

“ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றினேன். ஒரு கட்டத்தில்அந்த இசையமைப்பாளருடன் சேர்ந்து பணியாற்ற முடியாத சூழ்நிலை உருவானது.அடைத்து நான் என்ன செய்வது என்று எனக்கே தெரியாமல்ஏழு ஆண்டுகள் சும்மாவே இருந்தேன் . அதன் காரணம் நான் பிரிந்த அந்த இசை அமைப்பாளர் தான். திரைஉலகில் அவரதுஆளுமை அப்படி.அந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நல்ல இசை அமைப்பாளரை உருவாக்குவோம் என்று நினைத்து முப்பத்தி ஏழு இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றினேன். யாரும் சோபிக்கவில்லை”.

“அந்த நிலையில் தான் ஒரு நாள் பாலச்சந்தரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது . போனால் திலீப் என்ற புது இசை அமைப்பாளரை எனக்கி அறிமுகப்படுத்தினார். பாலச்சந்தரின் அடுத்த தொடர்ந்த மூன்று படங்களுக்கு என் பாடல். திலீப்பின் இசை . மூன்று படத்திலும் பாடல்கள் படுபயங்கர ஹிட் . அந்த திலீப்தான் ஏ ஆர் ரகுமான் . மீண்டும் சினிமா என் பக்கம்வந்தது . திரையுலகில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. மீட்டெடுத்தவர் பாலச்சந்தர்” தான் என்று பேசினார்.

இதற்கு வைரமுத்து இப்படி பேசியது இளையராஜாவை இழிவுபடுத்துவது மட்டுமன்றி ஏழு ஆண்டுகள்வாய்ப்பில்லாத காலத்தில் முடங்கிக் கிடந்த வைரமுத்துவுக்கு வாய்ப்பளித்த முப்பத்தி ஏழு இசையமைப்பாளர்களையும் அசிங்கப்படுத்திவிட்டுப்தியாதாக எல்லோரும் குறிப்பிட்டு வருத்தப்பட்டார்கள்.

(Visited 1 times, 2 visits today)