உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் நேற்று மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை குறிக்கீட்டது. இதனால் ஆட்டம் பாதியில் தடைபட்டது.

ரிசர்வ் டேயின் அடிப்படையில் இந்தியா – நியூசிலாந்து இடையேயான அரையிறுதிப் போட்டி மழைக்காரணமாக  இன்று  தொடரும் என அறிவிக்கப்பட்டது.

எம்எஸ்டோனி

இந்த போட்டியில் களமிறங்கியதன் மூலம் இந்திய அணியின் அனுபவ வீரரான டோனி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். நேற்றைய போட்டி டோனிக்கு 350வது போட்டியாகும். இதன்மூலம் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 10வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

மேலும் இந்திய அணியில் சச்சினுக்கு பிறகு 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் எனும் சிறப்பைப் பெற்றார். குறிப்பாகஇ ஒரு விக்கெட் கீப்பராக 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் எனும் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

டோனிக்கு முன்னதாக இலங்கை அணியின் சங்ககரா, 360 ஒருநாள் போட்டிகளில் பங்குப் பெற்றாலும் 44 போட்டிகளில் விக்கெட் கீப்பராக பங்குப்பெறவில்லை.

இதுமட்டுமின்றி 350 ஒருநாள் போட்டிகளில் 200 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட முதல் இந்திய வீரர் எனும் பெருமையையும் டோனி படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)