இந்தி பட உலகில் திறமையான நடிகை என்று பெயர் வாங்கி இருப்பவர் கங்கனா ரணாவத்.

ஜெயம் ரவியுடன் ‘தாம்தூம்’ படத்தில் நடித்த கங்கனா, தொடர்ந்து இரண்டு முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். இவர் இந்தியில் நடித்த ‘குயின்’ படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் 4 தென் இந்திய மொழிகளில் ரீமேக் ஆகி வருகிறது.

திரைஉலகில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள் என்று சினிமா அந்தரங்கங்களை பகிரங்கமாக வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தி பட உலகில் நல்ல நடிகை என்று பெயர் வாங்கி இருக்கிறார்.

இந்த நிலையில், கங்கனா ரணாவத் குளியல் தொட்டியில் நிர்வாணமாக இருக்கும் படம் வெளியாகி, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் தற்போது ‘மென்டல் ஹை கியா’ என்ற படத்தில் ராஜ்குமார் ராவுடன் நடிக்கிறார். இந்த படத்தின் முதல் போஸ்டரில்தான் இவர் குளியல் தொட்டியில் நிர்வாணமாக உட்கார்ந்து இருக்கும் படம் இடம்பெற்றுள்ளது. அதில் அவருடைய கையில் கத்தி இருக்கிறது.

சமீபத்தில் ஸ்ரீதேவி துபாய் ஓட்டலில் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்தார். இந்த நிலையில் கங்கனா ரணாவத்தின் குளியல் தொட்டி நிர்வாண படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்தி நடிகைகள் நடிப்புக்காக எதற்கும் துணியும் நிலை அதிகரித்து வருகிறது.

(Visited 227 times, 1 visits today)