அட்லீ – விஜய் இணையும் மூன்றாவது படமான “பிகில்” படத்தில் தளபதி விஜய்-யை வைத்து கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி இயக்குநர் அட்லீ இயக்கி உள்ளார். இந்த படத்தின் பஸ்ர்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், விவேக், இந்துஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். “பிகில்” படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. பிரமாண்டமாக தயாரிகி வரும்இ இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நேற்று மாலை 6 மணிக்கு தளபதி விஜய்யை குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளிவரவுள்ளது என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். “பிகில்” படத்தின் புதிய அப்டேட் குறித்த விவரம் வெளியிடப்பட்டது. அதாவது “பிகில்” படத்தில் வெறித்தனம் என்ற முக்கிய பாடலை நடிகர் விஜய் பாடப்போகிறாராம்.

இதனை அடுத்து, “பிகில்” படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜி.கே.விஷ்ணு, தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் படக்குழுவினர் விசிலடிக்கும்படி போஸ் கொடுத்துள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)