விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ”பிகில்” படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா ஜோடியாக நடித்து வரும், இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த நிலையில் இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்திற்கு பிறகு ஷங்கர் படத்தில் நடிக்க விஜய் ஓகே சொல்லியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இப்படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் தளபதி விஜய் வெறித்தனம் என்ற பாடலை பாட உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டிருந்த போது தான் இது நடந்துள்ளது என்று தயாரிப்பாளர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் பாடும் வெறித்தனம் பாடலுக்கு விவேக் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

விஜய் அட்லியுடன் மூன்றாம் முறையாக இணந்துள்ள படம் ”பிகில்”. இப்படத்தில் அப்பா, மகன் என இரு வேடங்களில் விஜய் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. நயன்தாரா, யோகி பாபு, விவேக், மேயாத மான் புகழ் சிந்துஜா, பரியேறும் பெருமாள் புகழ் கதிர் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். விஜய் படத்தில் பெண்களுக்கு கால்பந்து பயிற்சி அளிக்கும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த வாரம் ”பிகில்” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு பெற்றது. வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)