பயன்படுத்தப்பட்ட மொபைல் போனை வாங்கும் போது அல்லது வெறுமனே உங்கள் போன் எப்போது தயாரிக்கப்பட்டது என்று அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்படும்போது, உண்மையில் அந்த போன் எவ்வளவு பழமையானது என்பதை கண்டறிய ஏதேனும் வழி உள்ளதா என ஆச்சர்யப்படுவோம்.

உங்கள் தொலைபேசி எவ்வளவு பழையது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க விரும்பினால், சில வழிகளில் சரிபார்க்கமுடியும்.

சில உற்பத்தியாளர்கள் உங்கள் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் அளவிற்கு நல் உள்ளம் படைத்தவர்களாக உள்ளனர். எனவே போன் உற்பத்தி செய்த திகதியை அதன் பெட்டியில் சேர்க்கிறார்கள். அந்தப் பெட்டியை திருப்பி பார்க்கையில் ”திகதி” அறிந்துகொள்ளலாம். எல்லா (குறைந்தது புதிய) ஒன்பிளஸ் மற்றும் பல மோட்டோரோலா போன்களின் பெட்டியிலும் திகதி சேர்க்கப்பட்டுள்ளது என்பதை நாம் உறுதிப்படுத்த முடியும். அதை அங்கே கண்டுபிடிக்க முடியவில்லையா? வேறு சில வழிகளில் சரிபார்க்கும் நேரம் இது!

சில மொபைல்போன்கள் உற்பத்தி செய்த திகதியை போனின் செட்டிங்ஸ் பகுதியில் சேர்த்துள்ளன. செட்டிங்ஸ் பகுதியில் அந்த திகதி தோன்றும் இடத்தில் வேறுபாடு இருந்தாலும், பொதுவாக ‘About Phone’ பகுதியில் எங்காவது போனைப் பற்றிய இந்த தகவல்கள் இடம்பெற்றிருக்கும். பற்றி. இதற்கு சிறிதளவு தேடல் தேவைப்படுகிறது.

இப்போது சில போன்களில் உற்பத்தி திகதி அல்லது வன்பொருள் பதிப்பு தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் மற்றவற்றில் சீரியல் எண் குறியீட்டில் அதைப் பற்றிய விவரங்கள் இருக்கும். துரதிர்ஷ்டவசமாக அதை கண்டுபிடிப்பதற்கு சற்று கடினமாக இருக்கும். உதாரணமாக, அப்பிள் போன்களில் உற்பத்தி விவரங்களை அதன் சீரியல் எண்களில் தெளிவாக கொண்டிருக்கிறது. 3 வது இலக்கம் ஆண்டை குறிக்கிறது. 9 என்றால் 2009, 0 என்றால் 2010 1 எனில் 2011என அப்படியே தொடர்கிறது. நான்காவது மற்றும் ஐந்தாவது இலக்கங்கள் பொதுவாக ஐபோன் தயாரிக்கப்பட்ட வாரத்தை குறிக்கிறது.

உங்களின் போனின் சீரியல் எண்ணில் தயாரிப்பு விவரங்கள் வெளிப்படையாக இல்லையெனில் கூகுள் செய்து பார்க்கலாம். ஏனெனில் பல்வேறு வகையான குறியீட்டு எண்கள் இருப்பதால், நீங்களாகவே கூகுள் செய்வதன் மூலம் உங்கள் போனின் விவரங்களை அறியமுடியும்.

நீங்கள் ஒரு சம்சுங் தொலைபேசியை வைத்திருந்தால், இந்த சூப்பர் எளிய முறையைப் பயன்படுத்த உங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. கூகுள் ப்ளேக்குச் சென்று ‘போன் இன்போ’ செயலியை தேடுங்கள். எடுத்துக்காட்டாக போன் இன்போ * சம்சங் * செயலி கலக்ஸி எஸ்7 எட்ஜ் போனில் வெற்றிகரமாக இயங்கி உற்பத்தி விவரங்களை வழங்கியது.

துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் வேறு சில போன்களில் ( ஒன்பிளஸ் 6, பிளாக்பெர்ரி கீ 2 மற்றும் lQ மிக்ஸ்) இதை பரிசோதித்தோம். ஆனால் போன் இன்போ செயலிகள், போன் உற்பத்தித் தரவுகளை வழங்கவில்லை. எனவே இது பெரும்பாலும் சாம்சங் சார்ந்த அம்சமாக தெரிகிறது. யாருக்கு தெரியும், நீங்கள் அதிர்ஷ்டவசமாக உங்கள் போன் விவரங்களை இந்த முறையில் பெறக்கூடும்.

துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் போன் பாக்ஸ் , செட்டிங்ஸ் அல்லது செயலியின் மூலமாக உற்பத்தி தேதியை கண்டுபிடிக்கவில்லை என்றால், உற்பத்தி குறியீடுகளை முயற்சிப்பது தான் கடைசி வாய்ப்பு. இந்த குறியீடுகளின் சிக்கல் என்னவென்றால், அவை ஓ.ஈ.எம் களுக்கு மட்டுமில்லாமல் , மொடல்களுக்கும் பொதுவானதாக இருக்கலாம். இதன் காரணமாக உங்களுக்கு நேரடியாக வழிகாட்ட சாத்தியமில்லை.
சில போன்களின் டயலரில் * 197328640 * அல்லது * * 197328640 * * ஐ உள்ளிடுவதன் மூலம் தோன்றும் சர்வீஸ் மெனு மூலம் இந்த விவரங்களை பெறமுடியும். இது உங்கள் சாதனத்திற்கு வேலை செய்யவில்லை என்றால், உங்கள் உற்பத்தியாளர் குறியீட்டை கூகுள் வழியாக சரிபார்க்க வேண்டும்.

(Visited 1 times, 1 visits today)