ஜெயம் படம் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜெயம் ராஜா. வேறு மொழிகளில் உள்ள வெற்றி பெற்ற படங்களை தமிழில் ரிமேக் செய்து வெற்றி கண்டவர். தொடர்ந்து தன் தம்பி ஜெயம் ரவியுடன் இணைந்து நிறைய வெற்றி படங்களை இயக்கியவர். தொடர்ச்சியாக ரீமேக் படங்களை இயக்கியதன் மூலம் ரிமேக் ராஜா எனப்பெயர் பெற்றவர்.

தன் தம்பி தவிர முதல் முதலில் அவர் வெளியே படம் செய்தது ஹீரோ இளைய தளபதி விஜய் தான். ஜெயம் ராஜா திறமையின் மீது மதிப்பு கொண்டு அவருக்கு விஜய் வாய்ப்பு கொடுத்து உருவான படம் தான் வேலாயுதம். வேலாயுதம் வெற்றிக்கு பின் முதல்முறையாக ரிமேக் இல்லாமல் தனி ஒருவன் திரைப்படத்தை இயக்கினார் ஜெயம் ராஜா. அந்தப்படத்தின் அபார வெற்றி அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

தனி ஒருவன் வெற்றிக்கு பின்னால் அவர் மோகன் ராஜா ஆனார். வேலைக்காரன் படத்திற்கு பின்னால் மீண்டும் அவர் விஜய்யுடன் இணைவதாக செய்திகள் வந்தன. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகமனார்கள். ஆனால் திடீரென அட்லியுடன் விஜய் இணைந்து விஜய் படம் செய்வதாக மாறிய செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மோகன் ராஜாவுடன் விஜய் படம் எப்போது என்ற கேள்வி எழுந்தது. தற்போது மோகன் ராஜா தன் தம்பி ஜெயம் ரவியுடன் இணைந்து தனி ஒருவன் 2 படத்தை இயக்கும் வேலைகளில் உள்ளார். விஜய் அடுத்து மாநகரம் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைய உள்ளார். இதனால் மோகன் ராஜாவுடன் விஜய் இணைந்து படம் செய்ய மாட்டார் என தகவல் பரவியது. விஜய் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ள மோகன் ராஜா, ”கண்டிப்பாக நான் விஜய் சாருடன் இணைந்து படம் செய்வேன். அவர் என்னிடம் கதை கேட்டுக்கொண்டே இருக்கிறார். நான் தான் தனி ஒருவன் 2 முடித்தவுடன் உங்கள் படம் செய்கிறேன் எனச் சொன்னேன். தனி ஒருவன் முடித்தவுடன் விஜய் சார் படம் தான்” எனக் கூறியுள்ளார்.

இந்த விஷயம் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய் அடுத்தடுத்து நல்ல இயக்குநர்களுடன் படம் செய்வது ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தை தந்துள்ளது.

(Visited 1 times, 3 visits today)