இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வந்த மயக்கம் என்ன படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யா. இப்படத்தைத் தொடர்ந்து சிம்புவிற்கு ஜோடியாக ஒஸ்தி படத்தில் நடித்தார்.

2007ம் ஆண்டில் மிஸ் இண்டியா இன் அமெரிக்கா அழகி போட்டியில் டைட்டில் வென்றவர். தெலுங்கில் வந்த லீடர் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மயக்கம் என்ன மற்றும் ஒஸ்தி ஆகிய படங்களைத் தொடர்ந்து சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லாததால், தெலுங்கில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து 5 வருடங்களாக ஒதுங்கி இருந்தார்.

இந்த நிலையில்,பிஸினஸ் ஸ்கூல் ஒன்றில் பெரிய பொறுப்பு வகிக்கும் ரிச்சா, வெளிநாட்டைச் சேர்ந்த ஜோ என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது. கடந்த 2 ஆண்டுகளாக ஜோ லிக்கல்லா என்பவரை காதலித்து வந்தேன். இதையடுத்து, எங்களது காதலை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக விரைவில், எங்களது திருமணம் நடக்க இருக்கிறது. ஆனால், திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மை காலமாக சினிமா பிரபலங்கள் பலரும் திருமணம் செய்து கொண்டு வருகின்றனர். நடிகர் ஆர்யா சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். சிம்புவின் சகோதரர் குறளரசன் நபீலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஷாலுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இதற்கிடையில், நடிகை ரெஜினாவிற்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும்,விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)