அரச ஊழியர்கள் ஆடை தொடர்பான சுற்றறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி பெறவில்லை என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி ஒப்புக்கொண்டார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகி தற்சமயம் வாக்குமூலமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி கோரப்படவில்லை . அது அனைத்து செயலாளர்கள் மட்டத்தில் பேசி முடிவெடுக்கப்பட்டது.பல தரப்பின் கரிசனைகள் உள்வாங்கப்பட்டே அந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அந்த சுற்றறிக்கையால் எதுவும் சர்ச்சைகள் ஏற்பட்டதாக எவரும் என்னிடம் எழுத்துமூலம் முறையிடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)