நெர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் உள்பட அஜித் நடிப்பில் வந்த 7 முக்கிய படங்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளன.

பிங்க் என்ற பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களை அதிர வைத்தது. எந்தவொரு நடிகரும் இது போன்று நடித்திருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு தல அஜித்தின் மாஸ் வசனங்கள், ஆக்‌ஷன், சண்டை காட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தது.

மேலும், சிந்திக்க வைக்கும் விதமாக அவர் பேசிய டயலாக்கிற்கு கிடைத்த வரவேற்பு தனி. இப்போது நாட்டில் இந்த நிலைமை தான் நடந்து வருகிறது. ஒருவர் வாழ்வதற்கு மற்றொருவரை என்ன செய்ய முடியோ அந்தளவிற்கு அசிங்கப்படுத்தி, அவமானப் படுத்தி வருகின்றனர். விஸ்வாசத்திற்காக இன்னொருவரை அசிங்கப்படுத்துவதா? என்று நீதிமன்றத்தில் போலீஸ் அதிகாரியை கேட்கும் காட்சி காண்போரை சிந்திக்க வைத்துள்ளது என்றே கூறலாம்.

கிட்டத்தட்ட 2.05 நிமிடம் இருக்கும் இந்த டிரைலரின் கூண்டில் நிற்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை காப்பாற்ற அஜித் முயற்சிக்கிறாரா? இல்லை அவருக்கு தண்டை வாங்கிக் கொடுக்க முயற்சிக்கிறாரா? என்பது பலரது கேள்வி. ஆனால்,நம் சமூகத்தில் பெண்களைப் பற்றிய புரிதல் இல்லாமல், நாளுக்கு நாள் பெண்கள் தொடர்பான குற்றங்களே நம் நாட்டில் நடந்து வருகிறது என்று அஜித் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், நேற்று வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் உள்பட 7 படங்களின் பாடல் லிரிக் வீடியோ, டீசர், டிரைலர் ஆகியவை 5 லட்சத்திற்கும் மேலாக லைக்ஸ் குவித்துள்ளன. ஆம்இ தென்னிந்தியாவில் ஒரு நடிகரின் 7 படங்களின் வீடியோக்கள் யூடியூப்பில் சாதனை படைப்பது இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை தல அஜித்தை நிகழ்த்தியுள்ளார்.

சாதனை படைத்த படங்கள்: விவேகம் டீசர், விவேகம் டிரைலர், விஸ்வாசம் மோஷன் போஸ்டர், விஸ்வாசம் டிரைலர், அடிச்சு தூக்கு லிரிக், கண்ணான கண்ணே லிரிக் வீடியோ, நேர்கொண்ட பார்வை டிரைலர் ஆகியவை அடங்கும்.

நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலருக்கு 6.3 லட்சம் லைக்ஸூம், 52 ஆயிரம் டிஸ்லைக்ஸூம் கிடைத்துள்ளது. அதோடு, இந்த டிரைலரை 53 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)