பாகிஸ்தான் – அவுஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 17-வது லீக் ஆட்டம் டான்டனில் நேற்று நடைபெற்றது. அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். பிஞ்ச் 82 ரன்னில் அவுட்டாகினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில் 266 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

அவருக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருதினை, மைதானத்தில் இருந்த தனது குட்டி ரசிகருக்கு கொடுத்துள்ளார். மேலும் அந்த விருதுடன் தனது கையெழுத்தினையும் இட்டு மகிழ்ச்சியாக கொடுத்துள்ளார்.

வார்னரின் இந்த செயலை உலக கோப்பை கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளது. இதனையடுத்து வார்னரின் இந்த செயலுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் பாராட்டுகளை கமெண்ட்டுகளில் கூறி வருகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)