அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீரர் முகமது அமீர் 30 ஓட்டங்கள் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார்.

ஒரு நாள் போட்டியில் அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். இதற்கு முன்பு அவர் 28 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியதே சிறந்ததாக இருந்தது.

மேலும் உலக கோப்பையில் சிறப்பாக பந்து வீசிய 3-வது பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை முகமது அமீர் படைத்தார். அப்ரி ஷீ, வாசிம் அக்ரமுக்கு அடுத்தப்படியாக அவர் சிறப்பாக வீசி சாதித்தார்.

(Visited 1 times, 1 visits today)