இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் காலை முதல் நாடளாவிய ரிதியில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தன் காரணமாக பயணிகள் பெரும் அவதி நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

ஹட்டன் டிப்போவின் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் பாடசாலை சேவையினை முடித்து கொண்டு காலை 08 மணி யில் இருந்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் பணிபுரியும் அனைத்து பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் நிலுவைப் பணம் வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் உத்தியோகத்தர்களின் பதவி
உயர்வு உட்பட. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே பணி பகிஷ்கரிப்பு நாடளாவியரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது

இதனால் ஹட்டன், கொழும்பு, நுவரெலியா, கண்டி, மஸ்கெலியா, பொகவந்தலாவ, தலவாக்கலை,
டயகம ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு தொழிலுக்கு செல்லும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனையோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)