உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சி வழங்குவதற்கு விரும்புவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே ஆகியோர்
விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு அனுமதி கேட்டு அவர்களால் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், இந்த கடிதத்துடன் முஸ்லிம் அடிப்படைவாதம் குறித்தும், இவ்வாறான நிலைமை ஒன்று ஏற்படக்கூடும் என்றும் முன்னரே அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் அடங்கிய சீடிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்த பல்வேறு தகவல்கள் தங்கள் தங்களிடம் இருப்பதாகவும், அவை விசாரணைகளுக்கு பெறுமதியானவை என்றும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)