ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுடன் நேரில் பேச்சு நடத்த வேண்டும் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கை அடியோடு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்தக் கோரிக்கை ஜனாதிபதி தரப்பில் இருந்து தெரிவுக்குழு உறுப்பினர் ஒருவரினூடாக அறியக் கிடைத்தது எனவும், பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி தொடர்பிலும் இப்போது ஆராயப்படுவதால் அவரை சந்திப்பது தார்மீகமானதல்ல என தீர்மானிக்கப்பட்டது எனவும் மேற்படி குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)