பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட விஜயமாக இன்று புதன்கிழமை சிங்கப்பூர் செல்கின்றார்.

சிங்கப்பூர் வைத்தியசாலையொன்றில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச சிகிச்சை பெற்று வருகின்றார். அவரின் சுகநலன்களை விசாரித்தல் மற்றும் சில தனிப்பட்ட விடயங்களுக்காகவே பிரதமர் சிங்கப்பூருக்குச் விஜயம் செய்கின்றார் என தகவல்கள் தெரிவித்தன.

பிரதமருடன் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவும் சிங்கப்பூர் செல்கின்றார்.

சிங்கப்பூரில் பிரதமர் மருத்துவ பரிசோதனை ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 15ஆம் திகதி அவர் நாடு திரும்பவுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)