உலகக்கிண்ண காற்பந்து தகுதிகாண் போட்டியில் இலங்கை வந்து இலங்கையுடன் விளையாட மக்காவோ அணி மறுத்து வந்த நிலையில், இந்த போட்டியை ரத்து செய்வதாக ஆசிய காற்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகளை கருதி, தமது அணியை இலங்கைக்கு அனுப்ப முடியாது என்று மக்காவோ அறிவித்தது.

இதனை ஆராய்ந்த ஆசிய காற்பந்தாட்ட சம்மேளனம், இந்த போட்டியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

தகுதிகாண் போட்டியின் முதல் சுற்றில் இலங்கை அணி மக்காவோ சென்று விளையாடி தோற்றிருந்தது.

(Visited 1 times, 1 visits today)