நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்துக்கு அமைய முன்னெடுக்கப்படுகின்ற தெரிவிக்குழுவின் செயற்பாடுகளை ஒவ்வொருவரினதும் தேவைகளுக்கு அமைய மாற்ற முடியாது என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் விசேட தெரிவுக்குழுவின் உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

களனிப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து அழுத்தம் கொடுப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் உண்மை எதுவென்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(Visited 1 times, 1 visits today)