சமீபத்தில் திருமணமான பார்த்திபனின் மகள் கீர்த்தனா மற்றும் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்ஷய் ஆகியோரை நடிகர் விஜய் சர்பரைஸ் செய்துள்ளார்.

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் – நடிகை சீதா தம்பதியின் மகளான கீர்த்தனாவுக்கும், பிரபல தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்ஷய்க்கும் கடந்த இரு தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

சென்னை ராஜ அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த இவர்களின் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், புதுமண தம்பதியான கீர்த்தனா-அக்ஷய் ஆகியோரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து, அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வின்போது, நடிகர் பார்த்திபன் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதுவரை விஜய், பார்த்திபன் ஆகியோர் இணைந்து நடிக்கவில்லை. இந்த சந்திப்புக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

(Visited 171 times, 1 visits today)