நாமக்கல் மாவட்டத்தில் படுத்துக்கொண்டே பூனைக்கு பாலூட்டிய நாயின் பாசத்தை பொதுமக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி அருகிலுள்ள ஆண்டாபுரத்தைச் சேர்ந்தவர் ஜான். இவர், தனது வீட்டில் பெண் நாய் ஒன்றையும் பூனைக்குட்டி ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன், இந்த பெண் நாய் 6 குட்டிகளை ஈன்றுள்ளது. ஆரம்பம் முதல், நாயிடம் விளையாடியும், தூங்கியும் வந்துள்ளது.

இதையடுத்து, நாய் 6 குட்டிகளை ஈன்றதைத் தொடர்ந்து பூனைக்குட்டி நாயின் மடியில் படுத்துக்கொண்டு பாலை குடித்து வருகிறது. தன் இனமல்லாத மற்றொரு இனத்தைச் சேர்ந்த ஒரு உயிரினத்திற்கு நாய் பாலூட்டுவதை அப்பகுதி மக்கள், ஆச்சர்யத்துடன் கண்டு ரசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

(Visited 39 times, 1 visits today)