ஞானபீட விருது வாங்கிய பழம்பெரும் நடிகரான 81 வயதுடைய கிரஷ் கர்னாட் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார். மகாராஷ்டிர மாநிலத்தில் மாத்தேரான் என்ற இடத்தில் 1938 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி பிறந்தவர் கிரிஷ் கர்னாட். அவரது தாயார் ஒரு இளம் விதவையாக இருந்தவர். இவர் தந்தை டாக்டர் ரகுநாத் கர்னாட் ஆவார் . கிரிஷ் கர்னாட் நான்கு குழந்தைகளில் மூன்றாவது குழந்தையாக பிறந்தவர். பல தசாப்தங்களாக பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை நாடகங்களை உருவாக்கியவர இவர் .

பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை பெற்றவர் கிரிஷ் கர்னாட். மேலும் ஞானபீட விருது, 4 பிலிம்ஃபேர் விருதுகளை பெற்றிருந்தார். யு.ஆர். அனந்தமூர்த்தி எழுதிய நாவல் சமஸ்காராவை தழுவி கன்னட படம் எடுக்கப்பட்டது. அந்த படத்திற்கு திரைக்கதை எழுதி, நடித்து தனது திரையுலக பயணத்தை துவங்கினார் கிரிஷ் கர்னாட்.

ஆர். கே. நாராயணின் புத்தகங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட மால்குடி டேஸ் தொலைக்காட்சி தொடரில் சுவாமியின் தந்தையாக நடித்தார் அவர். வம்ச விருக்ஷா(1971) படம் மூலம் கிரிஷ் கர்னாட் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.

காதலன், காதல் மன்னன், ரட்சகன் உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார் கிரிஷ் கர்னாட். பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ள கிரிஷ் கர்னாட், மேடை நாடகங்களிலும் தனக்கென தனிப் பெயரைப் பெற்றவர் ஆவார்.

(Visited 1 times, 1 visits today)