நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைந்த பிறகு தன்னுடைய பணிகளில் வேகம் காட்டி வருகிறார். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் அவர், அரசியல் தொடர்பான சில கருத்துகளையும் அவ்வப்போது டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார்.

சமூக வலைதளங்களான ‘பேஸ்-புக்’, இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கணக்குகளை தொடங்கினார்.

ஏற்கனவே டுவிட்டரில் அவர் ‘சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்’ என்ற பெயரில் கணக்கு தொடங்கி இருந்தார். இந்த பெயரில் தான் கடந்த 5 ஆண்டுகளாக கணக்கு செயல்பட்டு வந்தது. அதில் இதுவரை அவரை 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடருகின்றனர்.

இந்த நிலையில் டுவிட்டரில் இருந்த ‘சூப்பர்ஸ்டார்’ என்ற பட்டத்தை துறந்துவிட்டார். அதற்கு பதிலாக ‘ரஜினிகாந்த்’ என்ற பெயரில் டுவிட்டர் கணக்கை தொடருகிறார்.

பேஸ்-புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளிலும் ரஜினிகாந்த் என்ற பெயர் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 59 times, 1 visits today)