* தாய்ப்பாலில் 85% நீர்ச்சத்து இருப்பதால், தனியாகக் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்க தேவையில்லை.

* ஆறுமாதம் முடியாத குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் தாய்ப்பாலிலும் பாட்டில் பாலிலும் உள்ள ஊட்டச்சத்துக்கள் அதிக தண்ணீர் குடிப்பதனால் ஊட்டச் சத்துக்கள் உடம்பில் சேராமல் போகும்.

வயிறு விரைவில் நிறைந்துவிடும். இந்த உணர்வால் குழந்தைகள் தாய்ப்பாலை சரியாகக் குடிக்க மாட்டார்கள்.

* கோடைகாலமாகவும் குளிர்காலமாகவும் இருந்தபோதிலும் குழந்தைக்கு ஆறு மாதம் வரை தண்ணீர் கொடுக்க தேவையில்லை.

தாய் பாலில் அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. அதுவே தண்ணீர் தாகத்தை தணிக்கும்.

* குழந்தைகளுக்கு சிறுநீரகங்கள் அவ்வளவாக வளர்ச்சியடையாமல் இருக்கும். நாம் கொடுக்கும் தண்ணீரினால் சிறுநீரகங்கள் அதிக வேலை செய்ய முடியாமல், முகம் வீக்கம் அடையும். கண்களை சுற்றிலும் நீர் கோர்த்தார் போல் வீங்கி காணப்படும்.

* அதிக தண்ணீர் உடலில் உள்ள சோடியத்தை கரைத்து விடலாம். திசுக்கள் வீக்கமடையும். சில குழந்தைகள் அதிகமாகத் தண்ணீர் குடித்தால், வாட்டர் இன்டாக்ஸிஃபிகேஷன் என்னும் நோய் வரலாம்.

* ஆறு மாதம் ஆன பிறகு குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கலாம். தேவையான பொழுது மட்டும் தண்ணீர் கொடுக்கலாம் குழந்தைகள் தண்ணீர் கேட்கும்போதும் கொடுக்கலாம்.

* ஒரு வயது ஆன பிறகு தண்ணீர் அடிக்கடி கொடுக்கலாம். குழந்தையின் 3 வயது வரை, வெந்நீரை கொதிக்க வைத்து ஆற வைத்துக் கொடுப்பது நல்லது. அதன் பிறகு பெரியவர்கள் குடிக்கும் தண்ணீரே குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

(Visited 1 times, 5 visits today)